அகண்ட காவிரி இனி வரண்ட காவிரியில்லை சற்றுமுன் மேட்டூர் அணை திறக்கப்பட்டது
Posted by Unknown on 1:00 PM with No comments
அகண்ட காவிரி இனி
வரண்ட காவிரியில்லை சற்றுமுன்
மேட்டூர் அணை திறக்கப்பட்டது
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து சற்று முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணையில் அப்போதிருந்த நீர் இருப்பையும், நீர்வரத்தையும் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 15 முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கடந்த
7-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து
அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று வரை 1லட்சம் கன அடி தண்ணீர் வந்துகொன்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி,
மேட்டூர் அணையின் நீர் அளவு
113.10 அடியாக உள்ளது. மேலும்,
வினாடிக்கு சுமார் 90 ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் வந்து
கொண்டிருக்கிறது. இதே அளவு நீர் தொடர்ந்து வரக்கூடும் என்றும் தெரிகிறது.
எனவே, தற்போதுள்ள
சூழ்நிலையை கருத்தில்கொண்டு, காவிரி டெல்டா
பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து 8ம் நிலை மதகிலிருந்து முதல்கட்டமாக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் இன்று சரியாக 4மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்
தமிழக அமைச்சர்களான ஓ.பன்னீர்
செல்வம், தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களும் ஏராளமான
பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.
இன்னும்
கொஞ்சம் மாதங்கள் வறண்ட காவிரியில்லை. அகண்ட காவிரிதான் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடலாம்.
Categories: தமிழகம்

0 comments:
Post a Comment