திருச்சி வக்கீல் – போலிஸ் மோதல் – இயக்குநர் யார்….?

Posted by Unknown on 5:00 PM with No comments
திருச்சி வக்கீல் – போலிஸ் மோதல் – இயக்குநர் யார்….?
இன்று திருச்சி கோர்டில் நடந்த வக்கீல் போலிஸ் பங்காளி டிராமாவில் இன்றைய சேர் மார்க்கெட் நிலவரப்படி 5 வக்கீல்கள் பொன்முருகேசன், தினகரன், சரவணன், முத்துகுமார், ஜெயக்குமார்  என கண்டன கூட்டத்தில் முதலில் பேசிய 5 பேர் மீதும் தற்போது 323, 324, 294(b), 353, 147, 341 and 506 (1) of IPC..  நீதிமன்ற காவல்நிலையத்தில் கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெல்டால் போலீஸை தாக்கும் வக்கீல்கள்
 ஏன் 5 பேர் இவர்கள் இல்லாமல் இன்னும் ஏகப்பட்ட பேர் மீது காவல்துறையினர் அதிரடி பாய்ச்சல் பாய செய்ய வேண்டிய வேலையை செய்து கொண்டுயிருக்கிறார்கள். இந்த உண்ணாவிரத பந்தலில் பேசிய 20க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் அச்சில் ஏற்றப்பட முடியாத வார்த்தைகளால் மாநகர கமிஷனரை பற்றி அவர் தென்னூர் ஷான்ஸ் ஓட்டலில் தனியறை (107) எதுக்கு, சுகர்பேஷசன்ட்டு, புரோக்கர். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்றெல்லாம் ஒவ்வொரு லிமிட் இன்ஸ்பெக்டர்கள் பற்றி போலிசுடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த வக்கீல்கள் தொழில் ரகசியத்தை ஒப்புதல் வாக்குமூலமாக பொதுமக்களிடம் ஒப்புவித்தார்கள்.
ஒரு சாதரண மனிதனுக்கு இருக்கும் குறைந்த பட்ச அளவு ரோசம் கூட இல்லாமல் போலிஸ் உடையணிந்த காவல்துறையினர் அட்வகேட்களை பேசவிட்டு அழகு பார்த்தது. எங்கள் அப்பன் குதிர்குள் இல்லை என்பதை இவர்களே ஒத்துக்கொண்டது போலவே இருந்தது.
சரி… இப்போது கதைக்கு வருவோம்.
எதற்காக இந்த கலாட்டா …
யார் இந்த குணா !
திருச்சி குணா

திருச்சி குணா. மண்ணச்சநல்லூர் குணா, உறையூர் குணா , குணா என்கிற குணசீலன்.

 டெல்டா மாவட்டங் களை சாதி ரீதியில் எதிரும் புதிருமாய் நின்று கதிகலங்க

வைத்த மணல்மேடு சங்கரும், முட்டை ரவியும் இப்போது இல்லை.


முதலில் போலீஸ் டீம், முட்டை ரவியை 2006-ல் என்கவுண்ட்டரில் போட்டுத்

தள்ளியது. இதைக்கண்டு தன்னையும் போலீஸ் சுடலாம் என பதறிய மணல்மேடு
சங்கர்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பலவகைகளிலும் முயன்றான்.



எனினும்... அவ னது உயிரையும் உருவியெடுத்தது காக்கிகளின் துப்பாக்கி.

இதற் கிடையே முட்டை ரவி இறந்தபிறகு... ரவியின் டீமுக்கு தலைமை
ஏற்றவன்தான் இந்தத் திருச்சி குணா.



 இவன் டெல்டா லிமிட்டையும் தாண்டி.. ஆத்தூர் சுமன், செங்கல்பட்டு

ரவிபிரகாஷ், சீர்காழி சத்யா, செல்லதுரை, சுந்தரபாண்டி, சின்ன ஆனந்த்,
பல்லு குமார், விக்டர், ஒத்தக்கை வினோத் , பாலக்கரை கண்ணாடிஆனந்த்,
பாலக்கரை ஸ்டீபன், லால்குடி மயில்வாகணன், ஆகிய தன் சிஷ்யகோடிகள் மூலம்...
தமிழகம் முழுக்க தன் ரவுடி சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறான். இந்த
குணாவின் ரவுடி ஜாதகத்தை மேலும் துருவியபோது மேலும்பல அதிரடித் தகவல்கள்
கிடைத்தன.



திருச்சி குணாவுக்குப் பூர்வீகம் இலங்கை. சின்ன வயதில் குடும்பத்தோடு

அகதியாய் தமிழகம் வந்தான் குணா. திருச்சி பெரிய கடைவீதி சந்துக்கடை
மார்க்கெட் பகுதியில் அவன்குடும்பம் அடைக்கலமானது.



அம்மா நர்ஸாக இருக்க... குணாவோ... சேர்வார் தோஷத்தால் ரவுடியாக வளர ஆரம்பித்தான்.



 இவனது க்ரைம் அதிரடிகளைக்கண்ட அப்போதைய திருச்சியின் பிரபல தாதாவான

பிச்சைமுத்து... ’"நீ என்னோடு இருக்கவேண்டியவன்டா... வாடா'’என இவனைத் தன்
சிஷ்யனாக சேர்த்துக்கொண்டான். அவனால் மனித ரத்த வாசனையை அறிந்துகொண்ட
குணா... பிச்சை முத்துவின் என்கவுண்ட்டருக்குப் பின்தான் முட்டை ரவி
டீமில் ஐக்கியமானான்.




முட்டை ரவிக்காக... தலித் சமூகத்தைச் சேர்ந்த சேட்டு, டிங்கி, சுரேஷ்

ஆகிய மூவரையும் மணிகண்டம் பைபாஸ் பகுதியில்.. பட்டப்பகலில் படு
பயங்கரமாகக் கொன்று... குணா திருச்சியையே பரபரக்க வைத்தான். அதேபோல்
செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரை... அவனது எதிரிகளுக்காகத்
தீர்த்துக்கட்டியும் பதட்டத் தகிப்பை ஏற்படுத்தினான்.



இதன் பிறகு இவனுடைய மார்கெட் வேல்யூ அதிகமாகிபோனதால் திருச்சியில் உள்ள

முக்கியமான வியாபர பிரமுகர்களை எல்லாம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான்.


இதற்கு இடையில் முட்டைரவியின் குரூப்பில் உள்ள சாமிரவி என்கிறவர்

வாண்டையர் குரூபில் சேர்ந்து பெரிய இடத்து பஞ்சாயத்துகளை மட்டும் அவர் இனத்தை சேர்ந்த போலிஸ் துணையோடு செய்து வருகின்றார். இந்த நிலையில் குணாவுக்கும், சாமிரவிக்கு
தொழில்முனை போட்டி ஏற்படுகிறது.



சாமிரவி வெளியே தெரியாத ரவுடி தாதாவாகவும்,அரசியல்வாதியாவும்,  குணா வெளிஉலகிற்கு அறிமுகமான தன் வாயாலேயே தன்னை கெடுத்து கொண்ட தாதாவாகும் வளர்கிறார்கள்.

இப்போது குணாவின் செல்பாடுகளில்  உடல்நிலை

சரியில்லை, மஞ்சள் காமாலை, கண்கள் இருட்டாகி கொண்டே செல்கிறது என்று

போலிசுக்கு தன்  இன்பார் வழக்கறிஞர்கள் மூலம் தகவல் சொல்லிக்கொண்டே இருக்கே இருக்கிறார்.
போலிஸ்சோ குணா செல்வது உண்மையா என்பதை கண்டறிய ஆவல் கொண்டு அவனை பிடித்தே ஆக வேண்டும் என்கிற முயற்சியில் தான் மார்ச் மாதம் தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பிடித்து சிறையில் தள்ளினார்கள்.
ஆனால்   குணா முன்பை விட இப்போது மிகவும் பலமானவனாகவும் அறிவாளியாகவும்

இருப்பதை கண்டு வெகுண்ட போலிஸ் குணாவை நையபுடைத்து குண்டர் சட்டத்தில் அடைத்தது. இதை அனைத்தையும் உடைத்தது. குணாவின் வக்கீல் படை.

நீதிமன்றத்தில் அதிகவேகமாக பணக்காரர்களாக ஆசைப்படும் இளம் வக்கீல்கள் கூட்டத்திற்கு        ( உறையூர் வக்கீல் மதியழன் போல் ) தலைவர் தான் வக்கீல் ராஜேந்திரகுமார். இந்த படை தான் தளபதி போல் இருந்து ரவுடி குணாவை பாதுகாத்து வந்தார்கள்.
இவர்கள் இருக்கும் தைரியத்தில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திருச்சி டவுன்ஹால் அரபி குளத்தெருவில் 10 அடி அகலம் உள்ள அந்த சந்தில் தன்னை போலிசில் பிடித்து கொடுத்த பொதுமக்களை அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு பட்டபகலில் ஊர்வலம் போல மிரட்டியது… போலிஸ்கே வெட்ககேடானது.
அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ஞானவேலை தவிர வேறு எந்த காக்கிசட்டைகாரர்கள் வராதாது மக்கள் மத்தியில் உயிர்பயத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தன்னை பிடித்து கொடுத்தவர்களுல் ஒருவர் என்று சந்தேகித்து 24மனை தெலுங்கு செட்டியார் சங்கத்தின் மாநிலதலைவராக இருந்து முசிறிபுத்தனை அடையாளம் காட்டி திருச்சி 1வது தொகுதியில் ஜெயிக்க வைத்த பி.எம். பழனியப்ப செட்டியாரின் பேரனான ஆறுமுகத்தின் வீட்டிற்குள் நுழைந்து அவர் மனைவி சரஸ்வதியை உம் புருஷன் 3 இலட்ச ரூபாய் பணம் கொண்டுவந்து குடுக்கலனா நாளைக்கு உன் கழுத்தில் தாலி தொங்காது இந்த குணாவை போலிசிடம் பிடிச்சு கொடுத்ததுக்கு நான் போடுற அபராதம் என்று மிரட்டி சென்றார்கள்.
மறுநாள் காலை சொல்லி வைத்தார் போல் இதே வார்த்தையை சொல்லி குணாவை பகைத்து கொள்ள வேண்டாம் அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவிடுங்கள் அது தான் உங்கள் குடும்பத்திற்கு நல்லது என்று அக்கறைபோடு வக்கீல் ரஜேந்திரகுமாரும் பேசுகிறார். பயந்து போன ஆறுமுகம் கோட்டைகாவல்நிலைய இன்ஸ்பெக்டரிடம் சென்று நடந்ததை குடும்பத்தோடு ஒப்பிக்க அதுவே புகாராக மாறி குணா மீதும் வக்கீல் ராஜேந்திரகுமார் மீது இன்னும் அவரோடு வந்த சிலர் மீது FIR  போட காரணமானது.
கஞ்சா விற்பவனை, போலி லாட்டரி சீட்டு விற்பவனை,  திருட்டு சிடி விற்பவனை,  செயின் பறிப்பவனை, பிட்பாக்கெட் அடிப்பவனை, கொள்ளையடிப்பவனை, வழிப்பறிசெய்பவனை, கொலை செய்பவனை, காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்து வெளியே போலிஸ் ஸ்டேஷனிலேயே வைத்து பேச்சு வார்த்தை நடத்தி பார்மாலிடிஸ் என்ற போர்வையில் பரிவர்த்தனை செய்வதை மட்டுமே செய்து கொண்டு இருக்கும் வக்கீல்களால், இன்று நல்ல நியாயமான வழக்கறிஞர்களுக்கும் காசுக்கு ஆசைப்பட்டு  கைநீட்டி காசுவாங்கி இன்றைக்கு வக்கீல்களால் கேவலபடுத்தப்பட்டதை நினைத்து உண்மையான நேர்மையாக காவல்துறையில் இருக்கும் ஒரு சிலருக்கும் நிச்சயம் இன்று இரவு தூக்கம் இருக்காது.
சரி…. இப்போ … முக்கியமான விசயத்தை சொல்லிடுவோம்…
வக்கீல்கள் பேசின பேச்சு அப்படியே வீடியோ சிடியாகி, இன்னைக்கு இரவே மாவட்ட தலைமைநீதிபதிக்கும், உயர்நீதிமன்ற தலைமைநீதிபதிக்கும் இரண்டு காப்பி அனுப்பியாச்சாம்… இது தெரிஞ்சு போன காலையில் கண்ட பொதுக்கூட்டத்தை ஆர்கனேஷ் பண்ணின சீனியர் வக்கீல்களான மார்டின், பால்ராஜ், சின்ன பசங்க செஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேராது என்று சோககீதம் பாடுகிறார்கள்.
இப்ப  கணக்கு காட்ட தான் 5 பேர்ரு  இன்னும் … பட்டியல் ரொம்ப ரொம்ப… நீநீநீநீநீநீளமாம்…