திமுக திருச்சி மாவட்ட செயலாளராக நேரு வெற்றி
Posted by Unknown on 7:00 PM with No comments
தி.மு.க திருச்சி மா.செ., தேர்தல் நேரு வெற்றிதி.மு.க., மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பன்னீர் செல்வம் மற்றும் சுரேஷ் ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தி.மு.க.,வில் 14 மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான தேர்தல் சென்னையில் நடந்தது. ஓட்டுப்பதிவு நேற்று முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கன்னியாகுமரி கிழக்கில், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் வெற்றி பெற்றுள்ளார். கடலூர் மேற்கில் கணேசன் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி வடக்கில், காடுவெட்டி தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தோல்வியடைந்துள்ளார்.
தஞ்சை தெற்கில் முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்தின் சகோதரர் ராஜ்குமார் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட துரை சந்திர சேகர் வெற்றி பெற்றுள்ளார்.
இதே போல், முன்னாள் அமைச்சர்களான கடலூரில் பன்னீர் செல்வமும் , மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு நேருவை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்கள் இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.


0 comments:
Post a Comment