தீர்ப்புக்கு பிறகு ஜெயலலிதா முதல்முறையாக ஸ்ரீரங்கத்தில் எல்.சி.டி. திரை........

Posted by Unknown on 11:08 AM with 1 comment

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவின் பேச்சு எல்.சி.டி. திரை மூலம் 


ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 13–ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (19–ந்தேதி) தொடங்கியது.

அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட இணை செயலாளரும், மாநகராட்சியின் 58–வது வார்டு கவுன்சிலருமான வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தங்கியிருந்து 10 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொது செயலாளர் அன்பழகன் உள்பட பலர் இடைத்தேர்தலுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இந்த தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாத நிலையில் உள்ளார். இதனால் அவர் முதல்வராக இருந்த போது பேசியவை மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த அரசு விழாக்களில் பேசிய பேச்சுகளை எல்.சி.டி. திரை மூலம் ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் ஒளிபரப்பி பிரசாரம் செய்ய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மேலும் கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட பாடல்களுக்கு நடன கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த 1984–ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் சாப்பிடுவது, இரட்டை விரலை காண்பிப்பது போன்ற காட்சிகளை வீடியோ எடுத்து தமிழகம் முழுவதும் தெரு தெருவாக அ.தி.மு.கவினர் டி.வியில் காண்பித்தனர். அதே பாணியில் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் எல்.சி.டி. திரை மூலம் ஜெயலலிதா பேச்சை ஒலிபரப்ப அ.தி.மு.க. நிர்வாகிகள் முடிவு செ