பொட்டு அம்மான் ஹாங்காங்கில் கைது ?- பொட்டுவை போட்டுக்கொடுத்த உறவினர்..? அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள்

Posted by Unknown on 8:00 AM with No comments
மிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஹாங்காங்க் நாட்டில் கைது செய்யப்பட்டதாகவும், பொட்டுவை உறவினர் ஒருவரே போட்டுக்கொடுத்த உறவினர்..? அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவலை லங்கன் எனும் இணையதளம் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்  புலனாய்வுத் துறை பொறுப்பாளராக இருந்தவர் பொட்டம்மான், சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயருடைய இவர், இலங்கைப் போர் இறுதிக்கட்டத்தில் தப்பிச்சென்று விட்டார் என்று பலமாக பேச்சு அடிப்பட்டது.

அப்போதே அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கனடா நாட்டில் இருப்பதாகவும்  சொல்லப்பட்டது. ஹாங்காங் நாட்டிற்கு தப்பிச் சென்ற பொட்டம்மானை,

இலங்கை ராணுவம், பல மாதங்களாக பொட்டு அம்மானை கண்காணித்து வந்ததாகவும், தனது மனைவி, குழந்தைகளை பார்க்க பொட்டு அம்மான் கனடா செல்ல முயன்றதாகவும், அப்போது இலங்கை ராணுவம் கைது செய்துள்ளதாகவும் அந்த இணையதள செய்தி தெரிவிக்கிறது.

மேலும், கைது செய்யப்பட்ட பொட்டு அம்மான் இலங்கை கொண்டு செல்லப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கிலும் பொட்டம்மானும் முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடதக்கது.

இந்த கைது தொடர்பாக இலங்கை அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.  வேறு எந்த ஊடகங்களும் உறுதியான தகவல் வெளியிடவில்லை என சொல்லப்பட்டுள்ள அந்த  லங்கன் இணையதளத்தில் மேலும் தகவல்கள் மிகவிரைவில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இணையதள செய்தி பார்க்க: http://www.lankann.com/2014/09/blog-post_615.html