இது .....தான்டா ..... திருச்சி போலீஸ்
Posted by Unknown on 7:12 PM with No comments
இது .....தான்டா ..... திருச்சி போலீஸ்
திருச்சியில் பிரபல ஸ்வீட் கடை பி.ஜி. நாயுடு வாசலில் போலீசார் காவல் காத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலும் கிளைகள் கொண்ட ஸ்வீட் கடை அது.
திருச்சி மாநக
ரில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து பாலக்கரை செல்லும் பகுதியில் மெயின்ரோட்டில் இதன் கிளை ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் இக்கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சென்று ரூ.1500க்கு ஸ்வீட் வாங்கியிருக்கிறார். அதிகாரி நேரிடையாக செல்லவில்லை.
அவர் ஜீப்பில் அமர்ந்திருக்க டிரைவர் மட்டும் சென்று வாங்கியிருக்கிறார். வாங்கிய ஸ்வீட்டிற்கு பணம் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக மேனேஜர் கேட்டதற்கு நாங்கள் முதலாளியிடம் பேசிக்கொள்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது. மேலும் மேனேஜர் முழு பணத்தையும் கழித்துக்கொள்ள முடியாது.
கொஞ்சமாவது பணம் கொடுங்கள் என கேட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த டிரைவர் ஸ்வீட் பார்சலை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் கடைக்கு அருகில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய போலீஸ் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுபோல், வாடிக்கையாளர்கள் உள்பட வாகனத்தில் யார் வந்தாலும் அங்கே நிற்கவிடாமல் விரட்டியது.
இதனால் அவர்கள் வேறு கடையை தேடிச் சென்றனர். இவ்வாறு மாலை 6.30க்கு ஆரம்பித்து இரவு 8.30 மணி வரை விரட்டினர்.
போலீஸ் கெடுபிடியால் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் நிறுத்த முடியாததால் அந்த ஸ்வீட் கடையின் அன்றைய வியாபாரம் முற்றிலும் பாதித்தது.
ரூ.1500க்காக 5,000 ரூபாய் வியாபாரத்தை இழந்து விட்டோமே என ஸ்வீட் கடையினர் புலம்பினர்.
Categories: திருச்சி


0 comments:
Post a Comment