350 டன் சமச்சீர் கல்வி புத்தகங்கள் எடைக்கு போட்ட விவகாரம் மணப்பாறை வியாபாரிக்கு வலை

Posted by Unknown on 12:30 AM with No comments
தமிழக அரசு பாடபுத்தகங்களை 350 டன் சமச்சீர் கல்வி புத்தகங்கள் எடைக்கு போட்ட விவகாரம்
மணப்பாறை வியாபாரிக்கு வலை

சிஇஓ அலுவலக பதிவறை எழுத்தர் கைது

கோவையில் 350 டன் பாட புத்தகங்களை எடைக்கு போட்ட விவகாரத்தில் சி.இ. ஓ. அலுவலக பதிவறை எழுத்தரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

மேலும் புத்தகங்களை 28 லாரிகளில் அனுப்பியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் அரசுப்பள்ளி மற்றும் புலியகுளம் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைத்திருந்த 13 லட்சத்து 69 ஆயிரத்து 74 சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் (350 டன்) 22.9.2013ல் மாயமானது.

கல்வித்துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், புத்தகங்களை பழைய பேப்பர் மொத்த வியாபாரி மூலம் சிவகாசி பட்டாசு ஆலைக்கு விற்றது தெரியவந்தது. 350 டன் பாட புத்தகங்களை கிலோ ரூ.2.50 வீதம் விற்று லாபம் பார்த்துள்ளனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, தற்போதைய சிஇஓ ஞானகவுரி கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அதில் முன்னாள் சிஇஓ ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் சரவணகுமார், பள்ளி கல்வி துணை ஆய்வாளர்கள் அருள்ஜோதி, பிரின்ஸ் சாலமோன், புலியகுளம் அந்தோணியார் பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துசேவியர், பதிவறை எழுத்தர் சேதுராமலிங்கம், தமிழ்நாடு பாடநூல் கழக தனி அதிகாரி கார்த்திகேயன் ஆகிய 7 பேர் மீது போலீசார், கூட்டுச்சதி, கையாடல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜேந்திரன், சரவணகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சரவணகுமார் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிஇஓ அலுவலக பதிவறை எழுத்தர் சேது ராமலிங்கம் (54) நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் அவரை, மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து நேற்றிரவு கைது செய்தார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;
350 டன் எடை கொண்ட புத்தகங்களை கோவில்பட்டியில் உள்ள பழைய புத்தக வியாபாரிக்கு ஒருவருக்கு 21 லாரிகளிலும், திருச்சி மணப்பாறையை சேர்ந்த பழைய புத்தக வியாபாரி ஒருவருக்கு 7 லாரியிலும் அனுப்பி வைத்தோம்.

கிலோ ரூ.4 வீதம் 350 டன் புத்தகங்களை இருவ ரும் சேர்ந்து விற்றோம். இதன் மூலம் ரூ.12.5 லட்சம் கிடைத்தது. கிடைத்த பண த்தில் நான் கார் வாங்கி னேன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள வடக்கூர் ஆகும். 16 வருடத்துக்கு முன் கோவை வந்தேன்.

பல்லடத்தில் அரசு பள்ளியில் காவலாளியாக பணியாற்றினேன். பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது கோவை சிஇஓ அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வருகிறேன்.

கோவை கலெ க்டர் அலுவலகம், பார தியார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பழைய பேப்பர் விற்கும் வியாபாரி மூலம் புத்தகங்களை அனுப்பி வைத்தோம் என்று சேதுராமலிங்கம் போலீசில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சேதுராமலிங்கம், சரவணகுமார் ஆகிய இருவரையும் போ லீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வரும் திங்கட்கிழமை மது தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் இருவரது சொத்துகளையும் முடக்க போலீசார் முடக்க திட்டமிட்டு வருகின்றனர். மேலும் இதில் யார் யாருக்கு பங்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

புத்தகங்களை வாங்கிய வியாபாரிகளை பிடிக்க தனிப்படை போலீ சார் கோவில்பட்டி, மணப்பாறைக்கு சென்றுள்ளனர். கைதான சேதுராமலிங்கம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத் திய சிறையில் அடைத்தனர்.
Categories: